ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: பிரான்ஸில் 40 டிகிரியைத் தொட்ட வெயில் - பள்ளிகள் மூடல்

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இதனால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதிக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: பிரான்ஸில் 40 டிகிரியைத் தொட்ட வெயில் - பள்ளிகள் மூடல்

ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.

இதனால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதிக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் எளிதில் நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு ஆளாவதைத் தடுக்க, பொது இடங்களில் மது அருந்தப் பிரான்ஸ் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கையாக 845 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல ரெயில்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெப்பத்தைத் தணிக்க நீர்நிலைகளில் குளித்தபோது, பிரான்சில் 4 சிறுவர்கள் உள்பட ஐரோப்பாவில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

முதியவர்கள் மற்றும் வீடற்றவர்களைப் பாதுகாக்க மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றமே இந்த அதீத வெப்பத்திற்குக் காரணம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.